மீண்டும் ஒரு அனுபவ பகிர்வு
ஒரு ஆங்கில பத்திரிக்கையின் நிருபர் சிவகாசியின் பட்டாசு தொழில் நிலவரங்கள் பற்றி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்து விபரங்களை சேகரிக்க வந்திருந்தனர் சில கிராமங்களுக்கு சென்றோம் செல்லும் வழியில் நாராணபுரம் அருகே நுாறு நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் முதியோர்கள் ஏராளம் உட்கார்ந்திருந்தார்கள் காரை நிறுத்த சொன்னேன் அவர்களிடம் எதற்காக வந்தோம் என்பதை சொல்லி விட்டு உட்கார்ந்தோம் கேள்விகளுக்கு பதில் இதோ கருப்பாயி (மஞ்சள் சேலைகட்டியவர்) என்ற அம்மா வெளுத்து கட்டி விட்டார் வடக்க இருப்பவர்கள் பட்டாசு வெடிக்கலன்னா அவுங்க பிள்ளைகளுக்கு பாதிப்புன்னு சொல்றாங்க ஆனா இங்க எங்க பி்ள்ளைகள் மட்டும் இல்ல குடும்பமே இத நம்பிதான் என் பேரன் 1150 மார்க் வாங்கிருக்கான் மெடிக்கல்ல சீட்டு கிடைக்கலயாம் 5லட்சம் கேட்டாங்க கட்டமுடியல பட்டாசுல வேலை பாக்குறது அன்றாடம் வயித்துக்கு சரியா போகுது இந்த மோடி பணம் செல்லாதுன்னு சொன்னாரு நாங்க என்ன பாடுபட்டோம் தெரியுமா வரி 28பிரசணட் கூட்டியிருக்காவளாம் ஏன் கொஞ்சம் குறைச்சா என்ன எதுக்கு எடுத்தாலும் வரி நாங்க என்ன உழச்சு வரிய கட்டவா நாங்க காத்துல மாட்ட கம்மல் கேட்கல நலதுணி மணி கட்ட வழியில்ல மூனு வேளைக்கு நிம்மதி சாப்பிடவும் கிடக்குற கூலிய வைச்சு பொழச்சா போதும் இந்த மோடி இவருலாம் ஒரு மனிசன் கொஞ்சம் கூட ஈவு சாவு இல்லாத மனிசன்னு அனல் பறத்தி விட்டது ஏராளமான வயோதியகர்கள் பல ஆயிரம் கொடுத்து முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்கல அவுக வேற யாரும் இல்ல அம்மா கட்சிக்காரனுங்கதான் சொல்லி நீங்க ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லி வேண்டுகோள் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் சொல்லி விட்டு வந்தோம் எங்களுக்காக போராடுறதுக்கு இந்த கம்யூனிஸ்ட்டு கட்சிக்காரங்க தான் வந்து பேசினாங்க போராட்டம் நடத்துனாங்க எங்களுக்கு பட்டாசு தொழில் தான் பொழப்பு இது இல்லன வேற தொழில் ஏற்பாடு செஞ்சு கொடுத்தா தான் இல்ல சாகுறத தவிர வேற வழியில்ல தீபாவளி முடிஞ்சு ஒரு மாசம் ஆச்சு வாங்குன காச வச்சு சமாளிக்கிறோம்ன்னு பேச பேச பிரச்சனைகள் அதிகம் நாம் தீர்த்துதான் வைக்க வேண்டும் ஆக களத்தில் பிரச்சனைகள் கொட்டிக் கிடக்கிறது அதை கலகமாக மாற்றிட நாம் தான் தயாராக வேண்டும் என்பதை பார்க்க முடிந்தது உடன் வந்த பத்திரிக்கையாளர்கள் பராவாயில்லை மற்ற கட்சிக்காரர்கள் போல தன்னை அடையாளப்படுத்த துடிக்க வில்லை கடைசியாக நீங்கள் நம்பிக்கையோடு பேசியது பாராட்ட வேண்டும் உங்களது கட்சிக்கு பொருத்தமான பெண்கள் அனைவரையும் நீங்கள் உறுப்பினராக சேர்த்துவிடலாம் என்றார் கம்யூனிஸ்டுகளான உங்களிடம் பிடிக்காத இரண்டு விசயங்கள் உள்ளது அதை தவிர அனைத்தும் ஓகே என்று பெரும் மகழ்ச்சியோடு விடைபெற்றனர்
பாலசுப்பிரமணியன்
விருதுநகர் மாவட்ட தீப்பெட்டி பட்டாசு தொழிலாளர் சங்கம்
பொதுச்செயலாளர்
செல் 9443910450
Comments
Post a Comment