ஒரு இணையதள ஆங்கில பத்திரிக்கையாளரும் நானும் பட்டாசு தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க சென்றோம் ஏனெனில் டெல்லி மற்றும் இதர மாநிலங்களில் தடை செய்யப்படுவதினால் ஏற்படும் பாதிப்புகள் தொழிலையும் தொழிலாளர்களையும் எந்த அளவில் பாதிக்கும் என்பது குறித்து நேரடி ரிப்போர்ட் என்பதுதான் இதன் நோக்கம் பல ஆண்டுகாலமாய் சாக்கடை அருகில் மட்டுமே குடியிருந்து பழகிப்போன தொழிலாளர்கள் நிறைந்த பகுதிக்கு சென்றோம் சில பேர் வேலைக்கு சென்றிருந்தனர் சில இளைஞர்களும் தென்பட்டனர் எல்லாரும் வேலைக்கு போய்ட்டாங்களா என்று கேட்டதற்கு ஆமா என்ன விஷயம் என்று ஆர்வமாக கேட்டனர் தெருவில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணி சொன்னது பட்டாசு தொழிலில் 5வருஷமா வேலை செய்றேன் எனது வீட்டுக்கார் அச்சாபீஸில் வேலை செய்கிறார் இத்தொழில் போதுமான கூலி செய்வதற்கு தக்கதான் என்றாலும் இந்த வருஷம் ஒருவாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் தான் வேலை கொடுத்தாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம் பணம் செல்லாதுன்னு சொன்ன பின்னாடிதான் காசுக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம்னு சொன்னாங்க இப்ப வரை பொழப்புக்கு வேற வழி இல்லை இதைவிட்டா வேற ஊரபாத்துதான் போகனும் அடுத்ததாக ஒரு இளைஞன் ...
Posts
Showing posts from October, 2017
- Get link
- X
- Other Apps
விடியும் முன்னே எழுந்து வீட்டுல உள்ள எல்லாருக்கும் இரண்டு வேளை சாப்பாட்டை ரெடி பண்ணிட்டு தெரு முனையில் அலாரம் அடித்துக் கொண்டிருக்கும் பட்டாசு தொழிற்சாலையின் வாகனம் காத்திருக்கும். தலை சீவாமல், எண்ணைய் தேய்க்காமல் நேரமாயிருச்சுன்னு ஓடிப்போய் பஸ் ஏறி பல கிமீ கடந்து வேலைக்கு செல்வது பட்டாசு தொழிலாளர்களின் அன்றாட வாழ்வில் ஒன்று இத்தொழிலை நம்பித்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் தினசரி வயிற்றுப் பசி தீருகிறது அதுவும் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத எந்த நேரமும் எப்படிப்பட்ட விபத்தும் ஏற்படலாம் என்றே தெரிந்து தான் இந்த வேலைக்கு செல்கிறார்கள் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் விடாப்பிடியான போராட்டத்தினால் பயிற்சி கொடுக்கப்பட்டு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது குட்டி ஜப்பான்? சிவகாசியை குட்டி ஜப்பான் என்று பெருமையோடு சொல்லும் காலத்தை முற்றிலுமாக இழந்து நிற்கிறது விவசாயமும் பொய்த்துப் போனது மாற்று தொழில் பட்டாசைத் தவிர அச்சு தீப்பெட்டி தொழில்களு...