விடியும் முன்னே எழுந்து வீட்டுல உள்ள
எல்லாருக்கும் இரண்டு வேளை சாப்பாட்டை ரெடி
பண்ணிட்டு தெரு முனையில் அலாரம் அடித்துக் கொண்டிருக்கும் பட்டாசு தொழிற்சாலையின் வாகனம்
காத்திருக்கும். தலை சீவாமல், எண்ணைய் தேய்க்காமல் நேரமாயிருச்சுன்னு ஓடிப்போய் பஸ்
ஏறி பல கிமீ கடந்து வேலைக்கு செல்வது பட்டாசு
தொழிலாளர்களின் அன்றாட வாழ்வில் ஒன்று இத்தொழிலை நம்பித்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட
தொழிலாளர்களின் தினசரி வயிற்றுப் பசி தீருகிறது
அதுவும் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத எந்த நேரமும் எப்படிப்பட்ட விபத்தும்
ஏற்படலாம் என்றே தெரிந்து தான் இந்த வேலைக்கு செல்கிறார்கள் தொடர்ந்து தொழிற்சங்கங்கள்
விடாப்பிடியான போராட்டத்தினால் பயிற்சி கொடுக்கப்பட்டு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது
குட்டி ஜப்பான்?
சிக்கல்கள்
மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்த நாட்கள் முதல் ஒவ்வொரு பிரச்சனையாக வந்தது அதிலும் தொழிலையே பதம்
பார்த்த சீன பட்டாசு
வரவு, மூலப்
பொருட்களின் விலை உயர்வு, பணம் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி
உயர்வு
இத்தகைய
அடுத்தடுத்த பிரச்சனையில் சிக்களுக்குள்ளாகியது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைத்திட வேண்டும் என்று உரிமையாளர்கள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தினர் சிஐடியு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற
பிரம்மாண்டமான போராட்டத்தையும்
நடத்தியது உற்பத்தியாளர்களும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தகுந்த ஒன்று
செயல்படாத மாநில அரசு
மாநில அரசோ ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தி வரியை குறைத்திட
நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி உற்பத்தியாளர்களை சமாதானப்படுத்தி எதிர்ப்பை
மட்டுப்படுத்தினர் அடுத்த நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கபட்டதாக எந்த
அதிகாரப்பூர்வ செய்தியும் இல்லை இது தான் மாநில அரசின் தொழிலையும் தொழிலாளர்களையும்
பாதுகாக்கும் லட்சனம்
கொள்கையே பிரதானம்
தொழிலுக்கு
பிரச்சனை என்று வரும் போது குரல் கொடுப்பதும் களம் காண்பதும் சிஐடியுவின் கடமை அதே
நேரத்தில் தொழிலாளர்களுக்கான பிரச்சனை என்கிற போது முதலாய் நிற்பது தான் சிஐடியுவின்
கொள்கைகளில் முதன்மையானது என்ற முறையில் சில கோரிக்கைகளை முன்வைத்து போராடி
வருகிறது அதனடிப்படையில் சிஐடியு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான போராட்டத்தையும் நடத்தியது உற்பத்தியாளர்களும்
ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தகுந்த ஒன்று
இந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையும்
எழாமல் இல்லை
உரிமையாளர்கள் ஜிஎஸ்டிக்காக போராட்டம் நடத்துகிறார்கள் இத்தனை
ஆண்டுகளாக கூலியும் போனசும் உயர்த்த வில்லையே அதனை உயர்த்திட சொல்லுங்கள் என்கிற கோரிக்கையும் முன்பை விட வலுவாகவே ஒலித்தது
எனவே சிஐடியும் பொருளாரதார பிரச்சனைகள் வாழ்வாதாரம் விலைவாசி உயர்வு ஆகியவற்றை
கணக்கில் கொண்டே கோரிக்கைகளை முன்வைக்கிறது என்பதை உற்பத்தியாளர்கள் பரிந்து
கொள்வது அவசியம்
உற்பத்தியாளர்களின்
12 நாட்கள் திடீர் கதவடைப்பு
போராட்டத்தால் தொழிலாளர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளானார்கள் அப்போது
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் வேலை இழப்பிற்கான நிவாரணத் தொகையை வழங்கிட
வேண்டும் என புகார் தெரிவிக்கப்பட்டது நாம் ஆஜராகி விட்டோம் உற்பத்தியாளர்கள்
வரவில்லை அதே போல் போனஸ் உயர்வு சம்பள உயர்வு பிரச்சனையில் அரசுக்கும்
உற்பத்தியாளர்களுக்கும் கடிதம் அனுப்பினால் பெற்று கொண்டு விட்டு எங்களது ஆலைகளில்
யாரும் சங்கத்தில் உறுப்பினராக இல்லை இத்தகைய கோரிக்கையையும் அவர்கள் எழுப்பவில்லை
என்று பதில் கடிதம் அனுப்பி விட்டு முடித்து விடுகின்றனர் இத்தகைய நடவடிக்கையை
கையாளும் உற்பத்தியாளர்களிடம் விளக்கம்
கேட்பதற்கு கூட மாவட்ட நிர்வாகமோ தொழிலாளர் நல ஆய்வாளரும் தயாராக இல்லை
சிஐடியுவின் இத்தனை ஆண்டுகால போராட்டத்திற்கு பின்பே குறைந்த பட்ச
கூலிக்கான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது தமிழக அரசின் ஓரவஞ்சனை என்னவென்றால் அரசால்
அங்கீகரிக்கப்பட்டு இம்மாவட்டத்தில் பல
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை கொண்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம்
தொழிலாளர்களோடு களத்தில் நிற்கிறது என்று அரசுக்கு தெரிந்தும் அதற்கு உரிய
பிரதிநிதித்துவம் வழங்கிடவில்லை என்பதிலிருந்தே அரசு நிர்வாகம் யார் பக்கம் என்பது
வெட்ட வெளிச்சம்
பச்சைத்துரோகம்
பட்டாசு
தொழிலில் லட்சக்கணக்கான பெண்களே இத்தொழிலில் அதிகம் ஈடுபட்டுவருகிறார்கள் இவர்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச சம்பளம்
எவ்வளவு தெரியுமா 150 ரூபாய் மட்டுமே பெண்களின் உழைப்பை சுரண்டிக் கொழுப்பதில்
அலாதி பிரியம் பட்டாசு தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளமும் உயர்த்தப்படவில்லை சம்பளம்
உயர்த்திக் கேட்டால் நீ வேலைக்கு வேண்டாம் என்று மிரட்டுப்படுகிறார்கள் வேறு
வேலைக்கு செல்ல மாற்றுத் தொழிலும் இல்லாத இச்சூழலை மிக்சரியாகவே பயன்படுத்திக்
கொள்கின்றனர் உற்பத்தியாளர்கள் தொழிலாளர்களுக்கு எவ்வித சட்ட பலன்களும் சமூக
பாதுகாப்பும் கிடையாது கான்ட்டிராக்ட் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பீஸ்
ரேட் கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு ஆண்டு
தோறும் வெறும் பைசா கணக்கில் உயர்த்தப்படும் கூலியும் உயர்த்தப்படவில்லை ஒரு
அதிர்ச்சியான செய்தி என்ன வென்றால் 25 ஆண்டுகளாக போனஸ் தொகை உயர்த்தப்படாமல்
ஏமாற்றப்படுகிறார்கள் ஆனால் ஆண்டு தோறும் விற்பனை என்பது பச்சை துரோகம் அல்லவா? இதற்காக ஆண்டு
தோறும் ரூ1000 கோடிக்கும் அதிகமான விற்பனை நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு மட்டும்
ரூ1600 கோடி விற்பனை நடைபெறும் கடந்த
ஆண்டை விட 30 சதவீதம் இலாபம் குறையும் என உற்பத்தியாளர்கள் கூறுகியுள்ளனர்
அப்படியானால் கடந்த ஆண்டு கூடுதல் இலாபமே கிடைத்துள்ளது ஆனால் தொழிலாளர்களுக்கு
கூலியை உயர்த்திட மறுத்து நஷ்டம், வரி என்று நாடகம் போடுகிறார்கள் என்பது தானே ஆளும்
அரசோ இதனை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் இதற்கு முடிவு கட்டும் போராட்டத்தை நடத்திட
வேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம்
அதிகாரிகளின் பணி?
இஎஸ்ஐ பிஎப்
பிடித்தம் சில முன்னணி நிறுவனங்களில் மட்டுமே இதர கம்பெனிகளில் இதெல்லாம் கடைப்பிடிக்கப்படுகிறதா
என்று கேட்டால் அப்படின்னா என்ன என்றே கேட்ப்பார்கள் பல
நிறுவனங்கள் இ.எஸ்.ஐ, பி.எஃப்-பிற்குத் தொழிலாளர் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்துவிட்டு அதனை இ.எஸ்.ஐ, பி.எஃப் அலுவலகங்களில் செலுத்தாது அப்பட்டமான மோசடியிலும் ஈடுபடுகின்றனர். இவை எதையும் இ.எஸ்.ஐ, பி.எஃப். நிர்வாகங்கள் கண்டு கொள்வதில்லை. பிடித்தம் செய்யப்படும் சில இடங்களிலும் உண்மைக்கு மாறான பதிவேடுகள்
இதை என்றாவது துறைவாரி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனரா? முறை கேடு செய்யும்
நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? எந்த புள்ளி விவரமும் கிடையாது
தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படும் நிதியில் செயல்படும் மருத்துவமனை அவர்களுக்கு
உரிய மருத்துவ வசதிகள் இன்னும் கிடைத்தபாடில்லை குறைந்த பட்சம் இரத்தவங்கி கூட
கிடையாது விடுமுறைக்கு அலைக்கழிப்பு என தொடரும் அவலங்கள்
விபத்துகள்
பட்டாசு வெடி விபத்தில்
சிக்கி பலியானால் அவர்களை நம்பியிருந்தவர்களின் எதிர்காலம் ஒரு கேள்விக் குறியாகி விடுகிறது.
குழந்தைகளும், முதியோர்களும் ஆதரவற்றவர்களாக விடுகின்றனர். விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள்
மரணம் அடையும் போது உடனே அதிகாரிகளும், மந்திரிகளும் ஒடோடி வந்து ஆறுதல் சொல்லுகிறார்கள். உற்பத்தியாளர்கள் கொடுக்கும் நிதியை அரசின் சார்பில் தந்ததாக விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு பின்பு. அதிகாரிகள் விபத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஆக்கப்பூர்வப் பணிகளை மேற்கொள்வதில்லை. ஆனால் சோதனை என்ற பெயரில் பட்டாசு ஆலை உரிமையாளர்களையும் அச்சுறுத்துகின்றனர் இத்தகைய அதிகாரிகள் மீது துறைவாரியான
நடவடிக்கை எடுப்பதில்லை இதனை எதிர்க்க உற்பத்தியாளர்களும் தயாரில்லை ஏன்? சில விதிமுறைகளை மீறுவதாலும் தானே பட்டாசு விபத்தில்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உற்பத்தியாளர்கள் கொடுக்கும் வெறும் இழப்பீடு தொகை
மட்டும் எதிர்கால வாழ்க்கைக்கு போதுமா? அரசின் பங்கு என்ன? எதுவும் இல்லை இதற்கு எதற்கு
அரசாங்கம்.
வெளிநாடு ஏற்றுமதி
உலக அளவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு
விற்பனை செய்யப்படுவதாக புள்ளி விவரங்கள் சொல்லப்படுகிறது இதில் சீனா முன்னணியில் உள்ளது
அங்கு ஏராளமான விதிமுறைகள் மீறப்படுவதால் மூட உத்தரவிட்பட்டுள்ளது இந்தியாவின் தயாரிக்கப்படும்
பட்டாசு பாதுகாப்பாக வெடிக்கப்படக்கூடிய ஒன்றும் என்பதால் உலகளவில் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது தற்போது
கப்பல்துறையில் கிளீயரன்ஸ் அனுமதி கிடைத்திட
தாமதமாவதால் ஏற்றுமதி செய்வதில் சிரமத்திற்கு உள்ளாவதால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை
எனவே மத்திய அரசு வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியை செய்திடும் நடவடிக்கையை துரிதப்படுத்திட வேண்டும்
கூட்டு போராட்டங்கள்
அவசியம்
ஆளும் ஆட்சியாளர்களின்
தவறான போக்குகளால் தொழில் பாதிக்கப்படும் போது வெறும் உற்பத்தியாளர்கள் மட்டுமே போராடி
வெற்றி பெற முடியும் என்றால் இயலாத ஒன்று எனவே தொழிலை பாதுகாக்க உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கங்களோடு
இணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம் என்பதை தற்போது ஆட்சியாளர்களின் செயல்பாட்டின்
வழியாக உணர்ந்திருக்கிறோம் என்பதால் கூட்டு போராட்டம் அவசியம் அதே நேரத்தில் தொழிலாளர்களின்
நலனும் மிக மிக அவசியம்
தீபாவளியன்று நாடு
முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியடையச் செய்வது வெறும் புத்தாடை மட்டுமல்ல
பல வண்ணங்களின் ஒளிக் கீற்றுகளே வானத்தையும் வாய்பிளக்க வைக்கிறது இத்தகைய மகிழ்ச்சிக்குப்
பின்னால் கல்வியறிவு இல்லாத முந்தைய தலைமுறைகளின்
உழைப்பும் வக்கற்றவர்களின் திக்கற்றவர்களின் உழைப்பால் தானே அத்தகைய தொழிலாளர்களின்
வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கிறதா இல்லை என்பதே சாதியாய் மதங்காளாய் பிரியாமல் தொழிலாளர் வர்க்கமாய் ஒன்றிணைவோம்


Comments
Post a Comment