Posts

Showing posts from November, 2017
Image
மீண்டும் ஒரு அனுபவ பகிர்வு                                 ஒரு ஆங்கில பத்திரிக்கையின் நிருபர் சிவகாசியின் பட்டாசு தொழில் நிலவரங்கள் பற்றி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் குறித்து விபரங்களை சேகரிக்க வந்திருந்தனர் சில கிராமங்களுக்கு சென்றோம் செல்லும் வழியில் நாராணபுரம் அருகே நுாறு நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் முதியோர்கள் ஏராளம் உட்கார்ந்திருந்தார்கள் காரை நிறுத்த சொன்னேன் அவர்களிடம் எதற்காக வந்தோம் என்பதை சொல்லி விட்டு உட்கார்ந்தோம் கேள்விகளுக்கு பதில் இதோ கருப்பா யி (மஞ்சள் சேலைகட்டியவர்) என்ற அம்மா வெளுத்து கட்டி விட்டார் வடக்க இருப்பவர்கள் பட்டாசு வெடிக்கலன்னா அவுங்க பிள்ளைகளுக்கு பாதிப்புன்னு சொல்றாங்க ஆனா இங்க எங்க பி்ள்ளைகள் மட்டும் இல்ல குடும்பமே இத நம்பிதான் என் பேரன் 1150 மார்க் வாங்கிருக்கான் மெடிக்கல்ல சீட்டு கிடைக்கலயாம் 5லட்சம் கேட்டாங்க கட்டமுடியல பட்டாசுல வேலை பாக்குறது அன்றாடம் வயித்துக்கு சரியா போகுது இந்த மோடி பணம் செல்லாதுன்னு சொன்னாரு நாங்க...
பட்டாசு தொழிலாளிக்கு உதவித் தொகை  பெரும் மகிழ்ச்சியில் நான்......... கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ரூபன் கேப்ஸ் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் முருகேஸ்வரி என்ற பெண்மணி பாதிக்கப்பட்டார் அவருக்கு உடம்பெல்லாம் தீக்காயம் கண்பார்வை பறிபோய் விட்டது பல அரசியல் கட்சிகள் ஆறுதலை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றனர் இவரின் கணவரோ உன்னோடு குடும்பம் நடத்த முடியாது என்றும் கைவிட்டு போய்விட்டார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கேட்க சென்ற போது அவர் படும் பாட்டை பார்த்தேன் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை எல்லோரும் வாராங்க யாரும் உதவ தயாரில்லை என்று புலம்பினார்  உடனடியாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பத்தேன் தொடர்ந்து கவனம் செலுத்தினேன்  இவருக்கு உதவி கிடைக்க வில்லையெனில் எத்தகைய நிலைக்கும்செல்வேன் என்று அதிகாரியிடம் தெரிவித்தேன் அதிகாரியும் உறுதியளித்தனர் தற்போது இம்மாதம் முதல் ரூபாய் 1000 உதவிதொகை கிடைத்துவிட்டது ஆகப்பெரும் மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன்
Image
                                                                                                                       ஜீலை 10.2017 பட்டாசுத் தொழிலை பாதுகாப்போம்! தொழிலாளர்களையும் பாதுகாப்போம்! உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் இணைந்து சிஐடியு தலைமையில் ஒன்று பட்ட  போராட்டத்தை நடத்துவோம்! பட்டாசு தொழிலிலுக்கு அநியாயமாக  விதிக்கப்பட்ட 28 சதவீத வரியை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளார் சங்கம் (சிஐடியு) சார்பில் சிவகாசியில்  2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான ஊர்வலம் இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ. வாசுகி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார் கண்டன உரையாற...