பட்டாசு தொழிலாளிக்கு உதவித் தொகை 

பெரும் மகிழ்ச்சியில் நான்.........

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ரூபன் கேப்ஸ் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் முருகேஸ்வரி என்ற பெண்மணி பாதிக்கப்பட்டார் அவருக்கு உடம்பெல்லாம் தீக்காயம் கண்பார்வை பறிபோய் விட்டது பல அரசியல் கட்சிகள் ஆறுதலை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றனர் இவரின் கணவரோ உன்னோடு குடும்பம் நடத்த முடியாது என்றும் கைவிட்டு போய்விட்டார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கேட்க சென்ற போது அவர் படும் பாட்டை பார்த்தேன் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை எல்லோரும் வாராங்க யாரும் உதவ தயாரில்லை என்று புலம்பினார்  உடனடியாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பத்தேன் தொடர்ந்து கவனம் செலுத்தினேன்  இவருக்கு உதவி கிடைக்க வில்லையெனில் எத்தகைய நிலைக்கும்செல்வேன் என்று அதிகாரியிடம் தெரிவித்தேன் அதிகாரியும் உறுதியளித்தனர் தற்போது இம்மாதம் முதல் ரூபாய் 1000 உதவிதொகை கிடைத்துவிட்டது ஆகப்பெரும் மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன்

Comments

Popular posts from this blog