நாங்கள் இருக்கிறோம் உங்களோடு பயணிக்க ......
பட்டாசு என்றாலே
வானில் வர்னஜால வித்தைகளை காட்டி குழந்தைகள், பெரியவர்கள் என பாரபட்சம் இன்றி கைதட்டி ஆரவாரம் செய்து நம்மை நம் மனதை சந்தோஷம் கொள்ளச் செய்யும் பண்டிகைகளில் தீபாவளி ஒன்றே இம்மகிழ்ச்சிக்கு பின்னால் இதோ எம் தொழிலாளர்களின் உயிர் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் அதன் பின் இருப்பது மூனு வேளை சாப்பாடு, வறுமை இதனை கச்சிதமாக பயன்படுத்தும் ஆலை முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல் இதனை கேட்க நாதியற்று கிடக்கும் நம் அரசு இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் தெருமுனைகளில் கம்பீரமாகவும் தொய்ந்தும் பறந்து கொண்டிருக்கும் இக்கட்சிகளின் கொள்கை என்ன கோட்பாடு என்ன தத்துவம் என்ன ? எதுவும் தெரியாது ஆனால் இக்கட்சிக்கு இம்மக்கள் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்கிறார்கள் ஆனால் இம்மக்களின் வாழ்கைத் துயரங்கள் குறித்து வெற்றி பெற்ற அரசியல் இயக்கங்கள் என்றாவது ஒரு நாள் இம்மக்களை சந்தித்து பேசியது உண்டா? அவர்களுக்கு நம்பிக்கையளித்திட ஏதேனும் சிறு முயற்சிகள் நடந்ததுண்டா? இல்லை இதற்குள் உள்ள அரசியலை நம் தொழிாளர்களிடத்தில் உரையாட நேரம் ஒதுக்குவதில்லை என்பதினாலேதான் இவர்கள் மேலும் மேலும் பலம் பெறுகிறார்கள்
ஒரு முதியவர் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார் என்னவென்றால் எனக்கு விபரம் தெரிந்த வரை இத்தொழில் செய்கிறேன் வேறு தொழில் தெரியாது வயதாகி விட்டதால் எனக்கு சம்பளம் 50ரூபாய் எனது பிள்ளைகள் என்னை கவனிப்பதில்லை பென்சன் கேட்டு பல தடவை தாலுகா ஆபிஸ் போய் அலைஞ்சேன் வரும்மா நீங்க போங்கன்ன தான் சொல்றாங்க ஆனா அலைஞ்சது தான் மிச்சம் சாப்பாட்டுக்கு ரேஷன் அரிசி வாங்கி சாப்பிடுகிறேன் யாராவது ஏதாவது கொடுத்தா வாங்கி சாப்பிட்டுக்குவேன் இப்படித்தான் என் அன்றாட வயித்து பொழப்பு நடக்குது என்று கதறியழுதார் உங்க புண்ணியத்திலாவது பென்சன் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க என்று அழுது புலம்பினார் அழுது அழுது கண்ணீர் கூட வற்றிப்போனதாகவே இருந்தது அந்த வயதான அம்மாவின் கண்கள்
இவர்களை தான் மார்க்சீயம் வர்க்கங்களை தன் வசம் படுத்துவோம் என்கிறது இதனை போன்ற தொழிலாளர்களின் அவலநிலையை அறிந்து தான்
நம் முன்னோர்கள் ஒன்று சேர்வோம் போராடுவோம் வெற்றி பெறுவோம் என்று அறைகூவல் விடுத்துள்ளார்கள் என்றே நாம் அறியலாம்
இதற்கு மத்தியிலும் இதோ நாங்கள் இருக்கிறோம் என்று சின்ன சின்னதாய் நம்பிக்கை ஏற்படுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது சிஐடியூ
மேற்கண்ட அவலநிலை நாளுக்கு நாள் கிராமங்களில் அதிகரித்து வருகிறது என்பதே கவலைக்குரிய செய்தி அதை கண்கூடாக பார்த்து வருகிற நமக்கு தன்நிலையைப் பற்றி மறந்து அவர்களின் நிலையை உணர்ந்து கவலை நம்மை தொற்றிக் கொள்கிறது இதன் செய்தி நமக்கு உணர்த்துவது என்ன?
நாம் மக்களோடு மக்களாக இரண்டற கலந்திட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது
களம் காலியாகத்தான் இருக்கிறது நம்மோடு களம் காண யாரும் இல்லை ஆனால் நம் எதிரிகள் கிராமங்களில் வேர் விட துவங்கியிருக்கிறார்கள் என்பதையும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது உணரவும் முடிகிறது இதனை முறியடித்திட தொழிலாளர்களோடு பேசுவோம் விவாதிப்போம் சங்கம் அமைப்போம் தொழிற்சங்க அரசியல் உணர்வை ஊட்டுவோம் இதனை ஒரே நாளில் செய்திட முடியாது என்பதை அனைவரும் அறிவர் ஆனால் நேற்றைய நாளை விட இனி வரும் நாளில் வேகமாக முன்னேறுவோம்
மார்க்சீயத்தை உயர்த்திப்பிடிப்போம்
எதிரிகளை கருவறுப்போம்

Comments
Post a Comment