ஒரு இணையதள ஆங்கில பத்திரிக்கையாளரும் நானும் பட்டாசு தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க சென்றோம் ஏனெனில் டெல்லி மற்றும் இதர மாநிலங்களில் தடை செய்யப்படுவதினால் ஏற்படும் பாதிப்புகள் தொழிலையும் தொழிலாளர்களையும் எந்த அளவில் பாதிக்கும் என்பது குறித்து நேரடி ரிப்போர்ட் என்பதுதான் இதன் நோக்கம் 
பல ஆண்டுகாலமாய் சாக்கடை அருகில் மட்டுமே குடியிருந்து பழகிப்போன தொழிலாளர்கள் நிறைந்த பகுதிக்கு சென்றோம் சில பேர் வேலைக்கு சென்றிருந்தனர் சில இளைஞர்களும் தென்பட்டனர்  எல்லாரும் வேலைக்கு போய்ட்டாங்களா என்று கேட்டதற்கு ஆமா என்ன விஷயம் என்று ஆர்வமாக கேட்டனர்  தெருவில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணி சொன்னது பட்டாசு தொழிலில் 5வருஷமா வேலை செய்றேன் எனது வீட்டுக்கார் அச்சாபீஸில் வேலை செய்கிறார் இத்தொழில் போதுமான கூலி செய்வதற்கு தக்கதான் என்றாலும் இந்த வருஷம் ஒருவாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் தான் வேலை கொடுத்தாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம் பணம் செல்லாதுன்னு சொன்ன பின்னாடிதான் காசுக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம்னு சொன்னாங்க இப்ப வரை பொழப்புக்கு வேற வழி இல்லை இதைவிட்டா வேற ஊரபாத்துதான் போகனும்
அடுத்ததாக ஒரு இளைஞன் நான் 5வருசமா வேலைக்கு போறேன் இதுக்கு முன்னாடி அச்சாபிஸ்க்கு தான் போனேன் சம்பளம் கட்டுபிடியாகல அங்க வேலைக்கு போனதும் ஒவ்வொரு வேலையா பாத்து தெரிஞ்ச பின்னாடிதான் இப்போ மருந்து சலிக்கும் வேலை பாக்குறேன் மருந்து பெயருல்லாம் தெரியாது போர்மேனுக்குதான் தெரியும் நாங்க வேலை பாரப்போம் இதனால் பாதிப்பு ஏதும் இருக்குதா இப்போ பாதிக்காது வயசானகாலத்துல பாதிக்கும் என்றார் சரி இந்த வேலை  இல்லையெனில் என்ன பண்ணுவீங்க உங்களோட சென்னை அல்லது டெல்லிக்கு வந்துர வேண்டியது தான் டெல்லி மட்டுமில்ல வடக்க பட்டாசு வாங்கினாதான் இங்க எங்களுக்கு 3வேளைசாப்பாடு இல்லைனா பட்டினிதான் 
                          சரிவருடம் முழுவதும் வேலை இருக்குமா இருக்காது தீபாவளி வேலை முடிஞ்சதும் காலண்டர் சீசன் வேலை பார்ப்போம் அப்புறம் கொத்த வேலைக்கு போவோம் தைமாசம் சாமிகும்பிட்டு அதுக்கப்புறம் வேலை ஆரம்பிப்பாங்க  சரி இப்போ நிநைய மாநிலங்களில்ல தடைசெய்றாங்க நீங்க என்ன பண்ணுவீங்க அவ்வளதான் ஊரை காலிபண்ணி போறத தவிர வேற வழியில்லை
60வயசு முடிஞ்ச ராணி என்ற அம்மாவ பார்த்தோம் இந்த தொழில்ல நான் 30வருஷசமாக பாக்குறேன் அன்னைக்கு 4குரோசுக்கு 5பைசா கொடுத்தாங்க இன்னைக்கு 75பைசா கொடுக்குறாங்க எனது வீட்டுக்காரரும் பட்டாசுல தான் வேலை பாக்குறாரு அவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போய்டும் எனக்கு வயிறுவலிக்கும் ஈஎஸ்ஐ ஆஸ்பத்திரியில போய்தான் பாப்போம் வெளியில பாக்குற அளவுக்கு வசதி வாய்ப்பு கிடையாது எல்லா வேலையும் தெரியும்
 எங்களுக்கு இரண்டு ஆண் இரண்டு பெண் பிள்ளைகள கட்டிக்கொடுத்துட்டோம் சொந்த வீடு கிடையாது அன்றாடம் வேலை பார்த்து குடும்பம் நடத்துறதே பெரும்பாடு சம்பளமும் கம்மிதான் கூட கேட்டா வேலைக்கு வேண்டாம்னு சொல்றாங்க வேற தொழில் இல்லை விவசாயம் வேலை ஒரு காலத்துல செஞ்சோம் இப்ப இல்ல இப்போ வயசாகிடுச்சு நீ வேலைக்கு வேண்டாம்னு சொல்றாங்க வேற வழியில்லாம போய்கிட்டுதான் இருக்கோம் இந்த மோடி அத தாரேன் இதை தாரேன் சொன்னாரு ஒன்னும் செய்யல இங்க அவரு வந்தா அவருகிட்ட நாலு கேள்வின்னாலும் நறுக்குன்னு கேட்பேன்னு சொல்லி முடித்தார்
இதுதான் இந்த மாவட்டத்தின் நிலைமை என்பதை சுற்றுச்சூழல் குறித்த புரிதலோ அல்லது பட்டாசுக்கு எதிராக பேசுவோர் கவனிக்கப்பட வேண்டியது அடுத்ததாக இத்தனை ஆண்டுகளாக ஆளும் ஆண்ட மத்திய மாநில அரசுகள் என்ன செய்தது இனிமேல் என்ன செய்யும் செய்துவிட முடியும் என்பதையும் பார்ப்போம்
நுாறு ஆண்டுகள் பாரம்பரியமிக்க தொழில் என்றால் தென்மாவட்டத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிலே இதில் 5லட்சம் தொழிலாளர்கள் பட்டாசுத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர் இத்தொழில் இங்கு உருவானதற்கு சீதோஷ்ண நிலைமையே காரணம் கந்தக பூமி என்றும் சொல்வார்கள் சிவகாசியின் முன்னோர்களால் தொலை நோக்குப் பார்வையோடு  உருவாக்கப்பட்ட இத்தொழில் இன்று 5 லட்சம் தொழிலாளர்களுக்கு வயிற்றுப் பசியை தீர்க்கிறது என்று சொன்னால் அளப்பரிய சாதனை தானே இதில் அரசின் பங்கு எத்தகையது என்றே கேட்டால் துரும்பு கூட இல்லை ஏன் அப்படி சொல்லக் காரணம் பின்பு பார்ப்போம்… இதற்கு இயந்திரம் தேவையில்லை மின்சாரம் தேவையில்லை இன்றும் கையால் செய்யப்படும் தொழில் எது என்று என்னை கேட்டால் இந்தியாவில் பட்டாசுத் தொழிலை தவிர ஏதேனும் இல்லை என்றே சொல்லலாம்
துரோகத்தின் துவக்கம்
சேது சமுத்திரகால்வாய் திட்டம் 2000ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட திட்டம் தென்மாவட்ட மக்களுக்கு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடிய இத்திட்டத்தை தற்போது ஆளும் பிஜேபி அரசு திட்டத்தில் மண்ணை அள்ளி போட்டது மட்டுமின்றி கனவோடு இருந்த தென்மாவட்ட மக்களின் கனவில் மண் அள்ளி போட்டு விட்டது தென்மாவட்ட போக்குவரத்துகளில் மிக முக்கியமான ஒன்று ரயில்பாதை இன்று வரை இரு வழிப்பாதை கூட அமைக்கபட வில்லையே எத்தனை 5 ஆண்டு திட்டங்கள் கடந்து விட்டது  அதற்கான முயற்சியை யார் தடுத்தது செய்திருக்கலாமே இங்கிருந்தே பிஜேபியின் துவக்கம் துவங்கி விட்டது என்றே சொல்லலாம்
சாதனையின் அவலங்கள்
கடந்து 25 அல்லது 50 ஆண்டு காலத்தை ஆய்வு செய்தோமானால் இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு ஏதேனும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறதா?  
1996ல் தென்மாவட்டத்தில் ஏற்பட்ட சாதீய மோதலுக்கு இம்மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் இல்லாததே காரணம் என்று நீதிபதி மோகன் கமிஷன் அறிக்கை அளித்துள்ளார் அந்த அறிக்கையை இன்று வரை திருப்பிப் பார்க்கப்பட்டதா இல்லையே ஆவணக்காப்பகத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறது
இந்த மாவட்டத்தில் ஒரு அரசு கல்லுாரி கூட உங்களால் உருவாக்கப்பட வில்லையே வாலிபர் சங்கத்தின் சார்பில் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்திற்கு பின்புதான் சட்டமன்றத்தில் தோழர் பாலபாரதி கல்வி தந்தை காமராஜர் பிறந்த மாவட்டத்தில் அரசு கல்லுாரி இல்லாததே வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று பதிவு செய்து இந்த ஆட்சியாளர்களின் லட்சணத்தை அம்பலப்படுத்தினார் அதன் பின்பே அரசுகல்லுாரி உருவாக்கப்பட்டது  இது மட்டுமா?
அரசே செய்த வஞ்சகம்!
தமிழக அரசுக்குச் சொந்தமான ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையில் 2000ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்த நிறுவனம் தற்போது 100 பேர் கூட வேலையில் இல்லை அதிலும் மூடுவிழா நடத்திட தயாராக இருந்தனர் பல்வேறு அரசியல் இயக்கங்களின் போராட்டத்தினால் குறிப்பாக அதற்கான அனைத்து முயற்சிகளையும் சிஐடியு முன்னெடுத்தது  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 110 விதியின் கீழ் நவீனப்படுத்திட 100 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார் அறிவிக்கப்பட்ட நிதியை பெறுவதற்கு அதை விட பெரிய போராட்டம் இது தான் ஆட்சியாளர்கள் இம்மாவட்டத்திற்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த லட்சனம்
விரட்டப்பட்ட தொழிலாளர்கள்
தீப்பெட்டித் தொழில் 1990ம் ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு  குறிப்பாக பெண்கள்  வேலைக்கு சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு வயிற்றுப்பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த மக்களின் வயிற்றில் அடித்ததை இம்மாவட்ட மக்கள் மறக்கவில்லை இத்தொழிலில் இயந்திரத்தை கொண்டு வர அரசு அனுமதித்தது அடுத்தடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்
கொள்ளையோ கொள்ளை
அது மட்டுமா தென்மாவட்டமான மதுரையில் இயற்கை கொடுத்த கனிமவளமான கிரானைட் மற்றும் தாதுமணல் இவற்றின் மூலம் பல ஆயிரக்கணக்கான கோடி கோடியாய் கொள்ளையடிக்கத்தான் செய்ததே தவிர நாட்டு மக்களின் வளர்சிக்கு பயன்படுத்தப்பட்டதா ஆண்ட  அல்லது ஆளும் அரசுகள் இப்படி இம்மாவட்டத்திற்கு ஆளும் மத்திய மாநில அரசுகள் ஏராளமான துன்பங்களை துயரங்களைத்தான்  கொடுத்துள்ளதே  தவிர எந்த உருப்படியான திட்டத்தையும் கொண்டு வரவில்லை அரசின் எந்தவிதமான முதலீடுகளும் இல்லாத ஒரு தொழிலை பாதுகாப்பதற்கு முன் வர வேண்டாமா? இத்தனை லட்சம் தொழிலாளிகளுக்கு இந்த அரசுகளால் வேலைவாய்ப்பை வழங்கிட முடியுமா? 
வீணடிக்கப்படும் வரிப்பணம்           
ஒரு துரும்பைக்கூட எடுத்துப்  போடவில்லை என்பதே மேற்கண்ட வரலாறுகள் ஆனால் ஒவ்வொரு மாவட்டத்தில் எம்ஜிஆர் நுாற்றாண்டு விழா என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் கோடி கோடியாய் வாரி இறைக்கப்டுகிறது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 1.25 லட்சம் மாதாந்திர சம்பள உயர்வு இங்கே எங்கள் பட்டாசு தொழிலாளி 150 ருபாய்க்கு தன் உயிரை பணயம் வைத்து வேலைக்கு செல்கிறான் அதைப்பற்றி கவலைப்பட ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை
அழிவை நோக்கி  
தற்போது பட்டாசுத் தொழிலில் அழிவை நோக்கிச் செல்கிறது காரணம் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சீன பட்டாசு வரவு அடுத்ததாக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு விதி முறைகள், பணம் மதிப்பிழப்பு, 28சதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு இத்தனையும் தாங்கிக் கொண்டு இத்தொழில் கம்பீரமாக நிற்கிறது என்று சொன்னால் ஒன்று உற்பத்தியாளர்கள் அதற்கும் மேலாக பெருமை சேர்க்கிற அற்புதமான தொழிலாளர்களின் உழைப்பு உயர் பலிகளாலும்  வேதனைகளாலும் வியர்வையின் சாட்சியாலும் தான் என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும்
 இந்தியாவின் ஒரு மாவட்டத்தை சார்ந்துள்ள தொழில்தான் என்று அலட்சியம் கொள்ள வேண்டாம் எதிர்கால வாழ்க்கை, கனவு, பொருளாதாரம் என இதனை நம்பி பல தலைமுறைகள் நகர்ந்து கொண்டிருக்கிறது இதில் மண்ணைப் போடும் விதமாக  ஆய்வு என்ற பெயரிலும் சுற்றுச்சூழல் கேடு என்ற பெயரிலும் விஷப்பிரச்சாரம் செய்யப்படுகிறது
பாதுகாப்பும் விதிமுறைகளும் அவசியம்
மேலும் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு  தொடரப்பட்டு நீதிமன்றமும் பாதுகாப்பு விதிமுறை பிரச்சாரம் செய்திட வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டது பாதுகாப்பு அம்சங்கள் விதிமுறைகள் என அனைத்தும் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை இதனை பயன்படுத்தி பட்டாசுக்கு எதிராக தொடர் பிரச்சாரம் செய்யப்படுகிறது இத்தகைய பிரச்சாரம் செய்வதற்கு முன்பு  பரிதாப நிலையில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைய ஆய்வு செய்திட வாருங்கள் அவர்களின் எதிர்காலத்தை உங்களை போல் ஏசி அறையில் உட்காரும் அளவிற்கு வசதிகளையும் திட்டங்களையும் உருவாக்கிட வேண்டாம் நிம்மதியான வாழ்க்கை உத்திரவாத்தை ஏற்படுத்திட உங்களால் உத்திரவாதம் தரமுடியுமா?  இதற்கு உதாரணமே மேற்கண்ட வரலாறுகள்
எனவே தற்போது டெல்லியில் பட்டாசு வெடிக்க தடைவிதித்துள்ளது சரி காற்று மாசை கட்டுப்படுத்திட வேண்டிய பொறுப்பு உற்ப்பத்தியாளர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இருக்கிறது என்பதை வேண்டுமானல் ஏற்கலாம் ஆனால் இதனை பயன்படுத்தி மேலும் சில வட மாநிலங்கள் தடை உத்தரவு போடப்படுகிறதே இதனால் 30சதவீதம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர் இதனால் பாதிக்கப்படுவது தொழிலும் தொழிலாளர்களே
பட்டாசு மட்டுமே காரணமா?
இந்தியாவின் ஒட்டு மொத்த சுற்றுச் சூழலையும் பட்டாசு வெடிப்பதனால் மட்டுமே பாதிக்கப்படுகிறது இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டுமே அதுவும் ஒரு நாள் பயன்படுத்துவதோடு சரி இதர நாட்கள் முழுவதும் இந்திய நாட்டு மக்கள் துாய்மையான காற்றை சுவாசிக்கிறோமா என்ன? சாலைகளில் வாகனங்களின் புகை மூட்டத்தால் சிக்கித் தவிக்காத நாள் ஏதேனும் உண்டா சொல்லுங்கள் பார்ப்போம்  நீங்கள் காரின் கண்ணாடிக்குள் இருந்து கொள்வீர்கள் ஆனால் காரின் புகையை வெளிவிடுவதை பற்றி பேசமாட்டீர்கள் இது எந்த வகையில் நியாயம் இதில் வெளியாகும் பட்டாசுகளில் உள்ள வேதிப் பொருட்கள் பாதுகாப்பானது அல்ல என்று சொல்லப்படுகிறது பாதுகாப்பானது இல்லையென்றால் மத்திய அரசுத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளும் அனுமதி கொடுத்து தானே இத்தனை ஆண்டுகள் தொழில் நடைபெற்று வருகிறது நீங்கள் சாப்பிடும் உணவுப்பொருட்களில் எதிலுமே நஞ்சுகள் இல்லையா?  விவசாயத்தில் மருந்து தெளிக்காமலா உற்பத்தி செய்யப்படுகிறது இதனால் மண்வளம் மக்கி விவசாயத்திற்கு லயக்கில்லாமல் மலட்டுத்தன்மையை உருவாக்கியதே இந்திய அரசுகளின் விவசாயக்கொள்கை எந்த பொருள் எடுத்தாலும் பாலிதின் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் 300 ஆண்டுகளுக்கு மேலானது இதனை தடுத்து விட்டீர்களா இல்லையே பாலிதினால் இந்திய நாட்டின் மண்வளம் எப்படி இருக்கிறது நான் விவரிக்க வேண்டிய அவசியமில்லை இப்படி இந்தியா முழுவதும் சூற்றுச்சூழல் மாசுபடுவதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளனவே அதை ஆய்வு செய்வது எப்போது அதனை கட்டுப்படுத்துவது எப்போது அல்லது அதனை கட்டுப்படுத்திட அரசு என்னென்ன முயற்சிகள் செய்துள்ளது திட்டங்கள் என்ன இப்படி ஏதேனும் ஒன்றைச் சொல்லுங்கள் பார்ப்போம்
கடந்த நிதியாண்டில் மட்டும் 1.77 கோடி இருசக்கர வாகனம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றால் அவை வெளியிடும் புகையின் அளவை கணக்கீடு செய்யுங்கள் தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து விதமான கனரக வாகனத்தின் கரும்புகையினால் ஏற்படும் மாசு எவ்வளவு என்று கணக்கிடுங்கள் இதேபோல கார் பஸ் லாரி ஆட்டோ தொழிற்சாலைகள் என இன்னும் பல நுாற்றுக்கணக்கான தரவுகள் உள்ளன அதையெல்லாம் விவாதிக்குற்கு உட்படுத்தப்படவில்லை ஆனால் பட்டாசை மட்டும் எதிர்ப்பதன் மர்மம் சூழ்ச்சியை தவிர வேறு ஒன்றும் இல்லை இத்தடையை தொடர்ந்து நீடித்தாலோ அல்லது இன்ன பிற மாநிலங்களும் இத்தகைய முடிவுக்கு வந்தால் தீபாவளி பண்டிகை முடிந்ததும் அடுத்த தேவைக்கான உற்பத்தியை செய்யமுடியாமல் போய்விடும் தொழிலாளர்களின் நிலையை எண்ணிப்பார்த்தால் கொடுமையானதாகவே மாறிவிடும்
எனவே தற்போது உச்சநீதி மன்றத்தில் நடைபெறும் வழக்குகளில் மத்திய பிஜேபி அரசும் தமிழக அரசும் இணைந்து இத்தொழிலை பாதுகாத்திடும் வகையில் வாத பிரதி வாதங்களை முன்வைத்திட வேண்டும்  இல்லையேல் 5லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை பிச்சையெடுத்து வாழ்வதற்கு தகுதியற்ற ஒரு மாவட்டமாகவும் உயிர் பிழைப்பது கஷ்டம் தான் ஆனால் அத்தகைய சூழ்நிலை உருவாகிட சிஐடியு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் வீதிகளையும் சாலைகளையும் நிரப்பிடும் வகையில் ஒன்று பட்ட போராட்டத்தை சிஐடியு தலைமையில் முன்னைவிட வலுவானதாக முன்னெடுப்போம்









Comments

Popular posts from this blog